Friday, 7 November 2014

சால்னா(வெஜ்)



ஹோட்டல்'ல பரோட்டாவுக்கு,இப்போ வெஜ் குருமா,ரெய்த்தா அல்லது ஸ்பெஷல் கிரேவீஸ்(மஸ்ரூம்,பனீர் பேபிகார்ன்) சாப்பிடுகிறோம்.

முன்பு  சாப்பிட்ட சால்னா இப்போ கிடைக்கிறதில்லை.அதன் சுவை சாப்பிட்டவர்களுக்கு தெரியும்.

பரோட்டா செய்தேன், சால்னா(வெஜ்)ஞாபகம், அதனால் செய்து பார்த்தேன்.வீட்டில் ஒரே பாராட்டு மழை !!!!!

நீங்களும் சாப்பிடுங்கள் இதோ ரெசிபி தருகிறேன்....


தேவையான பொருட்கள் :







வதக்கி அரைக்க,


பெ.வெங்காயம் -1 1/2

தக்காளி -2
பூண்டு -6 பல்லு 
இஞ்சி -2 இன்ச் 
தேங்காய் -நறுக்கியது 4 மே.கரண்டி 
சோம்பு -2 தே .கரண்டி  
சீரகம் -2 தே.கரண்டி 
மிளகு -2 மே .கரண்டி 
பட்டை ,கிராம்பு,பிரியாணி இலை -வாசனைக்கு 
எண்ணெய் -வதக்க தே .அளவு 
உப்பு-1/2 தே.கரண்டி(அரைக்கும் போது போட )

தாளிக்க :





பெ.வெங்காயம் -1 1/2

தக்காளி -1
கருவேப்பிலை -1/2 கைப்பிடி 

செய்முறை :


கடாயில் எண்ணெய் ஊற்றி,வதக்கி அரைக்க என மேலே கொடுத்துள்ள பொருட்களை வதக்கி உப்பு போட்டு அரைத்து தனியாக வைக்கவும் .






அதே கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க என கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளிக்கவும் 




பிறகு அரைத்த கலவையை சேர்த்து உப்பு கொஞ்சம் போட்டு 2 நிமிடம் கிளறவும்,தண்ணீர் விட்டு கொதித்தவுடன், மூடி மிதமான தீயில் வைத்து கொதிக்கவிடவும்.பச்சை வாசனை போனவுடன் அடுப்பை அணைக்கவும். 

கடைசியில் நெய் கொஞ்சம் விட்டு பரிமாறவும்...

பரோட்டாவிற்கு ஈஸியா செய்ற சால்னா தயார் .... 





குறிப்பு:காரத்திற்கு மிளகு மட்டும் சேர்ப்பதால்,காரத்திற்கேற்ப  தேவையான அளவு சேர்த்து கொள்ளவும்.


எங்க வீட்ல பெரும்பாலும் மண்பானை சமையல் தான்,அதான் மண்சட்டியில் செய்தேன். 






Friday, 31 October 2014

பீட்ரூட் கோலா



தேவையான பொருட்கள் :

பீட்ரூட் (துருவியது)-1 கப் 

தேங்காய் துருவல் -4 மே .கரண்டி 
பொட்டுக்கடலை -4 மே .கரண்டி 
இஞ்சி -2 இஞ்ச் 
பூண்டு -5 பல்லு 
பச்சை மிளகாய் -2
கருவேப்பிலை -1/2 கைப்பிடி 
சோம்பு -2 தே .கரண்டி 
உப்பு-தே .அளவு 
எண்ணெய் -பொரிக்க தேவையான அளவு 





செய்முறை:


பீட்ரூட் தவிர மற்ற எல்லா பொருட்களுடன் உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் அரைத்து கொள்ளவும் .





அரைத்த கலவையுடன்,பீட்ரூட் துருவல் போட்டு ஒன்றாக கலந்து வைக்கவும் 





கலந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும் .







கலர்புல் பீட்ரூட் கோலா  ரெடி .....







பீட்ரூட் நிறத்தை வைத்து சிலருக்கு பிடிக்காது,ஆனால் அதில் இருக்கும் சத்துக்கள்  ஏராளம்  .. 



பொதுவாக பீட்ரூட் பொரியல் ,கூட்டு ,சாதம் என செய்வதை விட இது  கொஞ்சம் வித்தியாசமான ரெசிபி...











Wednesday, 29 October 2014

ஜீரா போளி



தேவையான பொருட்கள் :

வறுக்காத ரவை -1 கப் 

சர்க்கரை -2 கப் 
எண்ணெய் -பொரிக்க தேவையான அளவு 
கேசரி பவுடர் -1 சிட்டிகை 
ஏலக்காய் -4






செய்முறை :


ரவையுடன் கேசரி பவுடர் சேர்த்து தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு போல கெட்டியாக பிசைந்து அப்படியே 2 மணி நேரம் வைக்கவும் .






இந்த மாவில் சிறிது எண்ணெய் சேர்த்து நன்றாக பிசைந்து வட்டமாக (சப்பாத்தி மாதிரி )தேய்த்து கொள்ளவும் .





வாணலியில் எண்ணெய் காய வைத்து ஒவ்வொரு வட்டமாக பொரித்து எடுத்து தனியாக வைக்கவும் .










இனி சர்க்கரை பாகு காய்ச்ச சர்க்கரை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு,ஏலக்காய் சேர்த்து  கம்பி பதம் வந்தவுடன் இறக்கி பொரித்து வைத்த வட்டங்களை ஒவ்வொன்றாக போட்டு சிறிது ஊறிய பின் பரிமாறவும் .




பார்த்தவுடன் நாவில் சுவை ஊறும் ஜீரா போளி ரெடி ...






தீபாவளிக்கு ஏதாவது வித்தியாசமான இனிப்பு வகை செய்ய நினைத்த போது சிறு வயதில் சாப்பிட்ட ஜீரா போளி ஞாபகம் வந்தது .செய்து பார்த்தேன், நன்றாக வந்தது அதை உங்களுடன் பகிர்ந்துள்ளேன் ....