Thursday 18 February 2016

குட்டி மீன் ...

தங்க மீனுக்கு ஒரு குட்டி மீன் ....

Friday 22 May 2015

கோதுமை கொழுக்கட்டை



சித்திரை திருவிழாவிற்கு பின் என்னுடைய பதிவு ....





தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு (வறுத்த கோதுமையில் அரைத்த மாவு,கோதுமை
இடியாப்பம் செய்முறையில் அதை வறுக்கும் முறை கூறியுள்ளேன் )
உப்பு
சர்க்கரை
தேங்காய்த் துருவல்



செய்முறை:

கோதுமை மாவில் உப்பு சேர்த்து,சுடுதண்ணீர் விட்டு,இடியாப்பத்திற்கு போல பிசைந்து கொள்ளவும்.



அந்த மாவை சிறிது எடுத்து உருண்டை உருட்டி,தட்டிக்கொள்ளவும் (புகைப்படத்தில் உள்ளது போல)



அதில் சர்க்கரை,தேங்காய்த்துருவல் வைத்து தட்டியதை மடக்கி ஓரங்களை மூடி விடவும்.



இதை இட்லி பாத்திரத்தில் வைத்து வேகவிடவும்.

சூடா ஆவி பறக்க கோதுமை கொழுக்கட்டை ரெடி .....





பசங்களுக்கெல்லாம் விடுமுறை தினமான இப்பொழுது மாலை நேரத்தில் ஏதாவது ஸ்நாக்ஸ் செய்யணுமா???
சத்தான,சுவையான,எளிமையான, வித்தியாசமான இந்த கொழுக்கட்டை செய்து கொடுங்க..... 



குறிப்பு :
இதை வறுத்த கோதுமையில் அரைத்த மாவில் தான் செய்ய வேண்டும்.
இந்த மாவு அரைத்து வச்சுகிட்டா எப்போ வேண்டுமானாலும் இடியாப்பம்,கொழுக்கட்டை செய்து சாப்பிடலாம். 


வாழ்க வளமுடன்....



Wednesday 15 April 2015

பிரண்டைக்குழம்பு









தேவையான பொருட்கள்:
பிரண்டை -2 கட்டு
புளி - 2 பெரிய நெல்லிக்காய் அளவு (புளியை  தண்ணீரில் கெட்டியாக கரைத்து புளிச்சாறு எடுத்து வைக்கவும்)
மசாலாப்பொடி(மல்லி &மிளகாய் கலந்த பொடி)-காரத்திற்கு( 3 மே.கரண்டி சேர்த்துள்ளேன்) 
உப்பு -தே.அளவு

தாளிக்க :

நல்லெண்ணெய் -2குழிக்கரண்டி
வெந்தயம் -1தே.கரண்டி
கருவேப்பிலை -தாளிக்க தே.அளவு
சின்ன வெங்காயம்-1கப்
பூண்டு -1கப்
தக்காளி -3 (நறுக்கியது)


அரைக்க:

தேங்காய் -1/2கப்(கொஞ்சம் போட்டாலே போதும்)
சோம்பு -1தே.கரண்டி
சின்னவெங்காயம்-6



செய்முறை:

பிரண்டையை  மேல் தோல் எடுத்துட்டு சுத்தம் செய்து கட் பண்ணி வைக்கவும்.


தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து,பிரண்டையை போட்டு நன்கு வதக்கவும்.(பிரண்டையை  நல்லா வதக்கினால் தான் நாக்கில் அரிப்பு வராது,பிரண்டை வதக்கும் போது  நிறம் மாறும்)







பின் மசாலாப்பொடி சேர்த்து 1/2நிமிடம் வதக்கி,உப்பு,மஞ்சள்தூள் போட்டு,அரைத்த தேங்காய் கலவை சேர்த்து 1நிமிடம் வதக்கி,புளிக்கரைசல் சேர்த்து நன்கு கலக்கிவிடவும்.




கொதி வந்தவுடன் மிதமான தீயில் வைத்து பிரண்டை வேகவிடவும்.


பச்சை வாசனை போய், எண்ணெய் பிரிந்து, பிரண்டை வெந்தவுடன்

கொத்தமல்லி தூவி  இறக்கவும்.

சூடான சாதம்,இட்லி,தோசை ஆகியவற்றிக்கு பிரண்டைக்குழம்பு சூப்பராக இருக்கும்.மறுநாள் வைத்து சாப்பிட இன்னும் சுவையாக இருக்கும்.




குறிப்பு:
பிரண்டை சீக்கிரம் வெந்துவிடும், வேகும் பதம் தெரியலையினா ,
புளிக்கரைசல் சேர்த்து கொதி வந்தவுடன் குக்கரில் 1விசில் வைக்கவும்.


பிரண்டை பற்றிய பயனுள்ள  தகவல் 


                                                                                                                      நன்றி - Peppers TV
வாழ்க வளமுடன்.....