Monday 22 December 2014

மசாலா பொரி


எல்லா குழந்தைகளுக்கும் பிடித்த பொரியுடன் கொஞ்சம் மசாலா சேர்த்து வறுத்தால்,பொரி பிடிக்காதவர்கள் கூட இரண்டு பிடி அள்ளி சாப்பிடுவாங்க...

இதில் மஞ்சள் ,மிளகு ,சீரகம்,கருவேப்பிலை,வரமிளகாய் போன்ற மசாலாக்கள் சேர்ந்துள்ளதால், இந்த பனி பொழியும் நேரத்தில் 
சளி,இருமலை விரட்ட உதவும்....

இதன் நிறமே எல்லோரையும் சாப்பிட அழைக்கும் ...


தேவையான பொருட்கள் :
பொரி -1 கப்
(இதனுடன் வறுத்த வேர்கடலை,பொரி கடலை சேர்த்து கொள்ளலாம்)
எண்ணெய் -1மே.கரண்டி
கருவேப்பிலை -1/4 கைப்பிடி
கடுகு -1/4 தே .கரண்டி
உளுந்து -1/4தே .கரண்டி
கடலை பருப்பு -1தே.கரண்டி
வரமிளகாய் -1
மிளகு(அ )மிளகுத்தூள் -1/2 தே .கரண்டி
சீரகம்(அ)சீரகத்தூள்  -1/2தே .கரண்டி
மஞ்சள்தூள் -1/2 தே .கரண்டி



செய்முறை :

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு ,உளுந்து போட்டு வெடித்தவுடன், கடலை பருப்பு, வரமிளகாய்,கருவேப்பிலை சேர்த்து வதக்கி பின் மிளகு,சீரகம்,மஞ்சள்பொடி போட்டு 1நிமிடம் கிளறி கடைசியாக பொரி சேர்த்து 1 முறை எல்லாம் கலக்கும் அளவுக்கு கிளறி இறக்கவும் .




சுடசுட மசாலா பொரி ரெடி ...

குறிப்பு :
காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால்,சில நாள் வைத்து சாப்பிடலாம்...



Thursday 18 December 2014

கம்பு தோசை


தேவையான  பொருட்கள் :

கம்பு -1 கப் 
இட்லி அரிசி /இட்லி குருணை -1/4 கப் 
உளுந்து -1/4 கப் 
வெந்தயம் -1தே.கரண்டி 




செய்முறை:

கம்பை  தனியாகவும்,அரிசி,உளுந்து ,வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்தும் இரவு முழுவதும் ஊறவைக்கவும்.

காலையில் அதை அரைத்து, உப்பு போட்டு கரைத்து, 4 மணி நேரம் அப்படியே வைத்து புளிக்க விடவும்,4 மணி நேரம் கழித்து பொங்கி நிற்கும்.பின் தோசை வார்க்கவும்.




இந்த தோசைக்கு தக்காளி சட்னி பொருத்தமாக இருக்கும் ...




Saturday 29 November 2014

ரசகுல்லா



பனீர் செய்தாச்சு,இனி அதை வச்சு ஒரு ஸ்வீட் செய்து பார்க்கலாமா ?????

பொதுவாக பனீர் வச்சு எந்த ஸ்வீட்ஸ் பண்ணினாலும்,ப்ரெஷ் பனீராக இருந்தால் ஸ்வீட்ஸ் டேஸ்டா இருக்கும்.

கிரேவி,பிரியாணி,பொடிமாஸ் எல்லாத்துக்கும்,செய்து பிரிட்ஜில் வைத்த பனீர் உபயோக்கலாம்.

தேவையான பொருட்கள் :

பனீர் (2 லிட்டர் பாலில் செய்தது)

சர்க்கரை பாகு செய்ய,

தண்ணீர் -2கப் 
சர்க்கரை -1 1/2 கப் 

செய்முறை:

பனீரை மிக்ஸியில் 1 நிமிடம் சுற்றவும்.
(இதனால் பனீர் எளிதாக வெடிப்பில்லாமல் உருட்ட வரும்)




அந்த பனீரை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.




சர்க்கரை பாகிற்கு,பாத்திரத்தில்  தண்ணீர்,சர்க்கரை இரண்டையும் போட்டு ஒரு கொதி வந்தவுடன், அடுப்பை மிதமான தீயில் வைத்து  கொதிக்க விடவும்.




பிறகு உருண்டைகளை ஒவ்வொன்றாக போட்டு மூடிவைக்கவும்.15 நிமிடம் அடுப்பில்(மிதமான தியில்) இருக்க  வேண்டும்.

ஒவ்வொரு 5 நிமிடத்திற்கு ஒரு முறை (மொத்தம்  3 முறை ) மூடியை  திறந்து சர்க்கரை பாகுகெட்டியாகாமால்
(கெட்டியானால் தண்ணீர் தெளிக்கவும்)பார்த்துக்கொள்ளவும்.
உருண்டைகள் அளவில் பெரிதாகி கொதித்து கொண்டிருக்கும் .




15 நிமிடத்தில் அடுப்பை அணைத்து விடலாம். 

நல்ல மிருதுவான,சுவையான ரசகுல்லா செய்தாச்சு ....




சாப்பிட்டு பாருங்க !!!!






  


Thursday 27 November 2014

வீட்டிலேயே பனீர் செய்யலாம்




தேவையான பொருட்கள் :

பால் -1லிட்டர் 
வினிகர் -2 தே.கரண்டி 
       அல்லது 
லெமன்-1(பெரியது )


செய்முறை :

லெமெனை ஜுஸாக பிழிந்து தண்ணீர் கலந்து தனியாக வைக்கவும் .
                                              (அல்லது )
வினிகர் உபயோகித்தால் அதனுடன் தண்ணீர் கலந்து தனியாக வைக்கவும் .


முதலில் பனீர் செய்ய,பாலை பாத்திரத்தில் ஊற்றிதண்ணீர் விடாமல்  காய்ச்ச வேண்டும்.பொங்கி வரும் போது,அடுப்பை சிம்மில் வைத்து தண்ணீர் கலந்து வைத்துள்ள வினிகர் அல்லது லெமன் ஜூஸை சேர்த்து கலக்க  வேண்டும்.

பால் திரிந்து வரும்.அடுப்பை அணைத்து விடவும்.



முழுவதும் திரிந்தவுடன் (பால் திரள்திரளாகவும் நீராகவும்பிரியும்),
பழச்சாறு வடிகட்டி மீது துணி போட்டு (அந்த திரளை நீரிலிருந்து பிரிக்க)
வடிகட்டவும்.



அதை சிங்க் பைப்பில் காட்டி ஸ்பூன் வைத்து கிளறி நன்றாக அலச வேண்டும்.(லெமன் ஜூஸ்(அ )வினிகர் சேர்ப்பதால்,அதன் புளிப்பு போக அலசுகிறோம்)

துணியை நன்றாக பிழிந்து நீர் முழுவதும் வடிகட்டி அப்படியே கட்டி(பயறு முளைக்கட்டுவது போல) அதன் மீது கனமான பொருளை வைத்து 2 மணி 
நேரம் அப்படியே வைக்கவும் .

பின் துணியை பிரித்தால் பனீர் தயார்.....



அதை கட் பண்ணி , டப்பாவில் அடைத்து, ப்ரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம்.

பனீர் செய்ய தெரிந்தது, இனி கிரேவி ,பொடிமாஸ்,பிரியாணி 
எல்லாம் வீட்ல செய்து அசத்துங்க ......



பி .குறிப்பு :

வடிகட்டியிலிருந்து கீழ வரும் நீரை கொட்டாமல் 4 (அ ) 5 நாட்கள் புளிக்க 
வைக்கும் தண்ணீரை வே வாட்டர் என்பர்.

இந்த வே  வாட்டரை பொங்கி வரும் பாலில் விட்டு பாலை திரித்து பனீர் செய்யலாம் .

சப்பாத்திக்கு மாவு பிசையும் போது 4 (அ ) 5 ஸ்பூன் இந்த வே வாட்டர் விட்டால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.







Saturday 22 November 2014

நெல்லி ரசம்



தேவையான பொருட்கள் :

பெரிய நெல்லிக்காய் -3
துவரம் பருப்பு -1/4 கப்
மஞ்சள்தூள் -1/4 தே .கரண்டி
பெருங்காயத்தூள் -1/4 தே .கரண்டி
வரமிளகாய்-2
புதினா-1/2 கைப்பிடி
உப்பு -தே .அளவு

தாளிக்க :

நெய் -1/2 தே .கரண்டி
சீரகம் -1/2 தே .கரண்டி



செய்முறை :

நெல்லிக்காய்,வரமிளகாய்,புதினாவுடன் கொஞ்சம் உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.



துவரம் பருப்புடன் மஞ்சள்தூள்,பெருங்காயத்தூள் சேர்த்து தண்ணீர் விட்டு நன்கு குழைய வேகவைத்துகொள்ளவும்.



பாத்திரத்தில் 2 கப் தண்ணீர்விட்டு  வேக வைத்த பருப்புக்கலவை, நெல்லிக்காய் விழுது,கொஞ்சம் உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து,பொங்கி வரும் போது இறக்கவும்.



வாணலியில் நெய் விட்டு சீரகம் போட்டு தாளித்து அதை ரசத்துடன் சேர்க்கவும்

இனி மணக்க மணக்க தயாராக உள்ள நெல்லிக்காய் ரசத்தை ஒரு புடி புடிக்கலாமா?????


Wednesday 12 November 2014

வெஜ் கொத்து சப்பாத்தி



தேவையான பொருட்கள் :

சப்பாத்தி -6
குருமா -1 கப் 
பெ .வெங்காயம்(நறுக்கியது )-2
தக்காளி (நறுக்கியது )-2
கருவேப்பிலை(நறுக்கியது ) -1/2 கைப்பிடி
கொத்தமல்லி -2 மே.கரண்டி 
குடமிளகாய்(நறுக்கியது ) -1
பட்டை-1 இன்ச் 
கிராம்பு -1
பிரியாணி இலை -2(சிறியது )
சோம்பு-1தே .கரண்டி 
சீரகத்தூள் -1தே .கரண்டி 
மிளகுத்தூள் -2 தே .கரண்டி 
உப்பு -தே .அளவு 
எண்ணெய் -தாளிக்க தே .அளவு 




செய்முறை :


சப்பாத்தியை கட் செய்து தனியாக  வைக்கவும்.




கடாயில்  சிறிது எண்ணெய் ஊற்றி நறுக்கிய குடமிளகாயை வதக்கி தனியாக வைக்கவும்.




அதே  கடாயில் எண்ணெய் விட்டு பட்டை,கிராம்பு ,பிரியாணி இலை ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டு வாசனை வந்தவுடன் சோம்பு,கருவேப்பிலை சேர்த்து  வதக்கவும் .

பிறகு வெங்காயம் போட்டு சிறிது வதங்கியவுடன்,குடமிளகாய் சேர்த்து வதக்கவும்,சீரகத்தூள்,மிளகுத்தூள் போட்டு 2 நிமிடம் வதக்கி உப்பு ,
தக்காளி சேர்த்து நன்றாக கிளறவும்.




பச்சை வாசனை போனயுடன் சப்பாத்தி துண்டுகளை போட்டு கிளறவும்,பிறகு அந்த குருமா சேர்த்து எல்லாம் கலந்து  வரும் வரை கிளறவும்.கடைசியாக கொத்தமல்லி  போட்டு பரிமாறவும்.






பார்க்கவே சாப்பிட தூண்டும் வெஜ் கொத்து சப்பாத்தி தயார் ....




குருமா சேர்த்துள்ளதால் அப்படியே சாப்பிடலாம்..
வெங்காயம்-தயிர் பச்சடியும்  தொட்டுக்கொள்ளலாம்...

குறிப்பு

மிளகுத்தூளிற்கு  பதிலாக பச்சை மிளகாய் சேர்க்கலாம் .

எந்த குருமானாலும்(வெஜ்,சால்னா,மஸ்ரூம் குழம்பு) சேர்த்துக்கலாம்.

மதியம் சாதத்திற்கு செய்த மஸ்ரூம் அரைச்சு விட்ட குழம்பு இருந்தது, அதை சேர்த்து செய்தேன். 


வாழ்க வளமுடன் .









Tuesday 11 November 2014

காளான் அரைத்து விட்ட குழம்பு




காளான்  குழம்பே கொஞ்சம் வித்தியாசமா செய்ய யோசித்தேன்,அப்போ கிடைத்த குழம்பு தான் மஸ்ரூம் அரைச்சு விட்ட குழம்பு...

மசாலா எல்லாம் சாதாரணமாக சேர்ப்பது தான் ...செய்முறை மட்டும் தான் கொஞ்சம் வித்தியாசம் ...

எப்படினு பார்க்கலாமா ???



தேவையான பொருட்கள்:




காளான்  -1பாக்கெட்
நறுக்கிய பெ .வெங்காயம் -2
நறுக்கிய தக்காளி -2
புதினா -1/2 கைப்பிடி
கொத்தமல்லி -1/2 கைப்பிடி
நெய் -1/2 தே.கரண்டி
மசாலாப்பொடி(மல்லி & மிளகாய் கலந்த பொடி)-2 மே .கரண்டி
எண்ணெய் -1 மே.கரண்டி

வறுத்து அரைக்க,




பட்டை-1 இன்ச்
கிராம்பு -1
பிரியாணி இலை -2
சோம்பு -2 தே.கரண்டி
கருவேப்பிலை -1 கைப்பிடி
தேங்காய்(நறுக்கியது)-1 கப்
எண்ணெய் -1 தே .கரண்டி 


செய்முறை :

காளானை கட் செய்து சுடுதண்ணீரில் போட்டு அலசி வடிகட்டி எடுத்து வைக்கவும் .

எண்ணெய் ஊற்றி பட்டை,கிராம்பு ,பிரியாணி இலை போட்டு வதக்கவும்,வாசனை வந்தவுடன் கருவேப்பிலை, சோம்பு,தேங்காய் போட்டு பொன்னிறமாகும்வரை வதக்கி,ஆறவைத்து,அரைத்து தனியாக வைக்கவும் .




குக்கரில் எண்ணெய் விட்டு வெங்காயம் ,புதினா போட்டு வதக்கவும்.
பிறகு தக்காளி சேர்த்து வதங்கியவுடன் மசாலாப்பொடி,உப்பு போட்டு 2 நிமிடம் வதக்கி,மஸ்ரூம் சேர்த்து கிளறவும் .

3 நிமிடம் கழித்து அரைத்த கலவை சேர்த்து, 1 நிமிடம் கிளறி தேவையான அளவு தண்ணீர் ,உப்பு  சேர்த்து,கடைசியாக நெய் விட்டு கிளறி மூடி,4 விசில் விட்டு இறக்கவும்.

நறுக்கிய கொத்தமல்லி  தூவி பரிமாறவும் ...






நெய்விட்டிருப்பதால்,எண்ணெய் பிரிந்து குழம்பு பார்க்கவே நன்றாக இருக்கும்!!!





எல்லாவற்றிக்கும்(சாதம்,இட்லி,தோசை,சப்பாத்தி,பூரி) பொருத்தமான குழம்பு இது //////


வாழ்க வளமுடன் 





























Saturday 8 November 2014

கருணைக்கிழங்கு மசியல்



நம் தாத்தா,பாட்டி காலத்து ரெசிபி இது ...

கருணைக்கிழங்கு குழம்பு,சாம்பார் சாப்பிட்டிருக்கிறேன்,மசியல் இப்போ தான் முதல் தடவை செய்தேன்,நன்றாக இருந்தது....

கருணைக்கிழங்குடன் புளி சேர்த்துள்ளதால் நாக்கில் அரிப்பெல்லாம் வராது .. 

தேவையான பொருட்கள் :

கருணைக்கிழங்கு -8
பச்சைமிளகாய் -3
வரமிளகாய் -2
உளுத்தம்பருப்பு -2 தே.கரண்டி
பொடியாக நறுக்கிய இஞ்சி -2 தே.கரண்டி
பெருங்காயத்தூள் -1 சிட்டிகை
கருவேப்பிலை -1/2 கைப்பிடி
புளி -எலுமிச்சை அளவு
உப்பு-தே .அளவு




செய்முறை:

புளியுடன் தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி தனியாக வைத்துக்கொள்ளவும்.

கருணைக்கிழங்கை உப்பு போட்டு  குக்கரில் 2 விசில் விட்டு வேக வைத்து தோல் உரித்து மசிக்கவும்.




கடாயில் எண்ணெய் ஊற்றி வரமிளகாய் போட்டு,கடுகு,உளுத்தம்பருப்பு,
பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்

பிறகு நறுக்கிய இஞ்சி,நறுக்கிய பச்சைமிளகாய்,கருவேப்பிலை போட்டு கிளறி,வறுபட்டவுடன் புளிக்கரைசல் விட்டு,உப்பு போட்டு கொதிக்க விடவும்




பச்சை வாசனை போனதும் கிழங்கை சேர்த்து கொதிக்கவிடவும்.எல்லாம்
கலந்து வந்தவுடன் அடுப்பை அணைக்கவும் .







நான் சாதத்துடன் மசியல்,நல்லெண்ணெய் விட்டு சாப்பிட்டேன்,அருமையாக இருந்தது ... இப்போ நினைத்தாலும் சுவை நாவில் தோன்றுகிறது ...


வாழ்க வளமுடன் 







Friday 7 November 2014

சால்னா(வெஜ்)



ஹோட்டல்'ல பரோட்டாவுக்கு,இப்போ வெஜ் குருமா,ரெய்த்தா அல்லது ஸ்பெஷல் கிரேவீஸ்(மஸ்ரூம்,பனீர் பேபிகார்ன்) சாப்பிடுகிறோம்.

முன்பு  சாப்பிட்ட சால்னா இப்போ கிடைக்கிறதில்லை.அதன் சுவை சாப்பிட்டவர்களுக்கு தெரியும்.

பரோட்டா செய்தேன், சால்னா(வெஜ்)ஞாபகம், அதனால் செய்து பார்த்தேன்.வீட்டில் ஒரே பாராட்டு மழை !!!!!

நீங்களும் சாப்பிடுங்கள் இதோ ரெசிபி தருகிறேன்....


தேவையான பொருட்கள் :







வதக்கி அரைக்க,


பெ.வெங்காயம் -1 1/2

தக்காளி -2
பூண்டு -6 பல்லு 
இஞ்சி -2 இன்ச் 
தேங்காய் -நறுக்கியது 4 மே.கரண்டி 
சோம்பு -2 தே .கரண்டி  
சீரகம் -2 தே.கரண்டி 
மிளகு -2 மே .கரண்டி 
பட்டை ,கிராம்பு,பிரியாணி இலை -வாசனைக்கு 
எண்ணெய் -வதக்க தே .அளவு 
உப்பு-1/2 தே.கரண்டி(அரைக்கும் போது போட )

தாளிக்க :





பெ.வெங்காயம் -1 1/2

தக்காளி -1
கருவேப்பிலை -1/2 கைப்பிடி 

செய்முறை :


கடாயில் எண்ணெய் ஊற்றி,வதக்கி அரைக்க என மேலே கொடுத்துள்ள பொருட்களை வதக்கி உப்பு போட்டு அரைத்து தனியாக வைக்கவும் .






அதே கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க என கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளிக்கவும் 




பிறகு அரைத்த கலவையை சேர்த்து உப்பு கொஞ்சம் போட்டு 2 நிமிடம் கிளறவும்,தண்ணீர் விட்டு கொதித்தவுடன், மூடி மிதமான தீயில் வைத்து கொதிக்கவிடவும்.பச்சை வாசனை போனவுடன் அடுப்பை அணைக்கவும். 

கடைசியில் நெய் கொஞ்சம் விட்டு பரிமாறவும்...

பரோட்டாவிற்கு ஈஸியா செய்ற சால்னா தயார் .... 





குறிப்பு:காரத்திற்கு மிளகு மட்டும் சேர்ப்பதால்,காரத்திற்கேற்ப  தேவையான அளவு சேர்த்து கொள்ளவும்.


எங்க வீட்ல பெரும்பாலும் மண்பானை சமையல் தான்,அதான் மண்சட்டியில் செய்தேன். 






Friday 31 October 2014

பீட்ரூட் கோலா



தேவையான பொருட்கள் :

பீட்ரூட் (துருவியது)-1 கப் 

தேங்காய் துருவல் -4 மே .கரண்டி 
பொட்டுக்கடலை -4 மே .கரண்டி 
இஞ்சி -2 இஞ்ச் 
பூண்டு -5 பல்லு 
பச்சை மிளகாய் -2
கருவேப்பிலை -1/2 கைப்பிடி 
சோம்பு -2 தே .கரண்டி 
உப்பு-தே .அளவு 
எண்ணெய் -பொரிக்க தேவையான அளவு 





செய்முறை:


பீட்ரூட் தவிர மற்ற எல்லா பொருட்களுடன் உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் அரைத்து கொள்ளவும் .





அரைத்த கலவையுடன்,பீட்ரூட் துருவல் போட்டு ஒன்றாக கலந்து வைக்கவும் 





கலந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும் .







கலர்புல் பீட்ரூட் கோலா  ரெடி .....







பீட்ரூட் நிறத்தை வைத்து சிலருக்கு பிடிக்காது,ஆனால் அதில் இருக்கும் சத்துக்கள்  ஏராளம்  .. 



பொதுவாக பீட்ரூட் பொரியல் ,கூட்டு ,சாதம் என செய்வதை விட இது  கொஞ்சம் வித்தியாசமான ரெசிபி...











Wednesday 29 October 2014

ஜீரா போளி



தேவையான பொருட்கள் :

வறுக்காத ரவை -1 கப் 

சர்க்கரை -2 கப் 
எண்ணெய் -பொரிக்க தேவையான அளவு 
கேசரி பவுடர் -1 சிட்டிகை 
ஏலக்காய் -4






செய்முறை :


ரவையுடன் கேசரி பவுடர் சேர்த்து தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு போல கெட்டியாக பிசைந்து அப்படியே 2 மணி நேரம் வைக்கவும் .






இந்த மாவில் சிறிது எண்ணெய் சேர்த்து நன்றாக பிசைந்து வட்டமாக (சப்பாத்தி மாதிரி )தேய்த்து கொள்ளவும் .





வாணலியில் எண்ணெய் காய வைத்து ஒவ்வொரு வட்டமாக பொரித்து எடுத்து தனியாக வைக்கவும் .










இனி சர்க்கரை பாகு காய்ச்ச சர்க்கரை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு,ஏலக்காய் சேர்த்து  கம்பி பதம் வந்தவுடன் இறக்கி பொரித்து வைத்த வட்டங்களை ஒவ்வொன்றாக போட்டு சிறிது ஊறிய பின் பரிமாறவும் .




பார்த்தவுடன் நாவில் சுவை ஊறும் ஜீரா போளி ரெடி ...






தீபாவளிக்கு ஏதாவது வித்தியாசமான இனிப்பு வகை செய்ய நினைத்த போது சிறு வயதில் சாப்பிட்ட ஜீரா போளி ஞாபகம் வந்தது .செய்து பார்த்தேன், நன்றாக வந்தது அதை உங்களுடன் பகிர்ந்துள்ளேன் ....