Monday 22 December 2014

மசாலா பொரி


எல்லா குழந்தைகளுக்கும் பிடித்த பொரியுடன் கொஞ்சம் மசாலா சேர்த்து வறுத்தால்,பொரி பிடிக்காதவர்கள் கூட இரண்டு பிடி அள்ளி சாப்பிடுவாங்க...

இதில் மஞ்சள் ,மிளகு ,சீரகம்,கருவேப்பிலை,வரமிளகாய் போன்ற மசாலாக்கள் சேர்ந்துள்ளதால், இந்த பனி பொழியும் நேரத்தில் 
சளி,இருமலை விரட்ட உதவும்....

இதன் நிறமே எல்லோரையும் சாப்பிட அழைக்கும் ...


தேவையான பொருட்கள் :
பொரி -1 கப்
(இதனுடன் வறுத்த வேர்கடலை,பொரி கடலை சேர்த்து கொள்ளலாம்)
எண்ணெய் -1மே.கரண்டி
கருவேப்பிலை -1/4 கைப்பிடி
கடுகு -1/4 தே .கரண்டி
உளுந்து -1/4தே .கரண்டி
கடலை பருப்பு -1தே.கரண்டி
வரமிளகாய் -1
மிளகு(அ )மிளகுத்தூள் -1/2 தே .கரண்டி
சீரகம்(அ)சீரகத்தூள்  -1/2தே .கரண்டி
மஞ்சள்தூள் -1/2 தே .கரண்டி



செய்முறை :

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு ,உளுந்து போட்டு வெடித்தவுடன், கடலை பருப்பு, வரமிளகாய்,கருவேப்பிலை சேர்த்து வதக்கி பின் மிளகு,சீரகம்,மஞ்சள்பொடி போட்டு 1நிமிடம் கிளறி கடைசியாக பொரி சேர்த்து 1 முறை எல்லாம் கலக்கும் அளவுக்கு கிளறி இறக்கவும் .




சுடசுட மசாலா பொரி ரெடி ...

குறிப்பு :
காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால்,சில நாள் வைத்து சாப்பிடலாம்...



Thursday 18 December 2014

கம்பு தோசை


தேவையான  பொருட்கள் :

கம்பு -1 கப் 
இட்லி அரிசி /இட்லி குருணை -1/4 கப் 
உளுந்து -1/4 கப் 
வெந்தயம் -1தே.கரண்டி 




செய்முறை:

கம்பை  தனியாகவும்,அரிசி,உளுந்து ,வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்தும் இரவு முழுவதும் ஊறவைக்கவும்.

காலையில் அதை அரைத்து, உப்பு போட்டு கரைத்து, 4 மணி நேரம் அப்படியே வைத்து புளிக்க விடவும்,4 மணி நேரம் கழித்து பொங்கி நிற்கும்.பின் தோசை வார்க்கவும்.




இந்த தோசைக்கு தக்காளி சட்னி பொருத்தமாக இருக்கும் ...