Friday 31 October 2014

பீட்ரூட் கோலா



தேவையான பொருட்கள் :

பீட்ரூட் (துருவியது)-1 கப் 

தேங்காய் துருவல் -4 மே .கரண்டி 
பொட்டுக்கடலை -4 மே .கரண்டி 
இஞ்சி -2 இஞ்ச் 
பூண்டு -5 பல்லு 
பச்சை மிளகாய் -2
கருவேப்பிலை -1/2 கைப்பிடி 
சோம்பு -2 தே .கரண்டி 
உப்பு-தே .அளவு 
எண்ணெய் -பொரிக்க தேவையான அளவு 





செய்முறை:


பீட்ரூட் தவிர மற்ற எல்லா பொருட்களுடன் உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் அரைத்து கொள்ளவும் .





அரைத்த கலவையுடன்,பீட்ரூட் துருவல் போட்டு ஒன்றாக கலந்து வைக்கவும் 





கலந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும் .







கலர்புல் பீட்ரூட் கோலா  ரெடி .....







பீட்ரூட் நிறத்தை வைத்து சிலருக்கு பிடிக்காது,ஆனால் அதில் இருக்கும் சத்துக்கள்  ஏராளம்  .. 



பொதுவாக பீட்ரூட் பொரியல் ,கூட்டு ,சாதம் என செய்வதை விட இது  கொஞ்சம் வித்தியாசமான ரெசிபி...











Wednesday 29 October 2014

ஜீரா போளி



தேவையான பொருட்கள் :

வறுக்காத ரவை -1 கப் 

சர்க்கரை -2 கப் 
எண்ணெய் -பொரிக்க தேவையான அளவு 
கேசரி பவுடர் -1 சிட்டிகை 
ஏலக்காய் -4






செய்முறை :


ரவையுடன் கேசரி பவுடர் சேர்த்து தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு போல கெட்டியாக பிசைந்து அப்படியே 2 மணி நேரம் வைக்கவும் .






இந்த மாவில் சிறிது எண்ணெய் சேர்த்து நன்றாக பிசைந்து வட்டமாக (சப்பாத்தி மாதிரி )தேய்த்து கொள்ளவும் .





வாணலியில் எண்ணெய் காய வைத்து ஒவ்வொரு வட்டமாக பொரித்து எடுத்து தனியாக வைக்கவும் .










இனி சர்க்கரை பாகு காய்ச்ச சர்க்கரை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு,ஏலக்காய் சேர்த்து  கம்பி பதம் வந்தவுடன் இறக்கி பொரித்து வைத்த வட்டங்களை ஒவ்வொன்றாக போட்டு சிறிது ஊறிய பின் பரிமாறவும் .




பார்த்தவுடன் நாவில் சுவை ஊறும் ஜீரா போளி ரெடி ...






தீபாவளிக்கு ஏதாவது வித்தியாசமான இனிப்பு வகை செய்ய நினைத்த போது சிறு வயதில் சாப்பிட்ட ஜீரா போளி ஞாபகம் வந்தது .செய்து பார்த்தேன், நன்றாக வந்தது அதை உங்களுடன் பகிர்ந்துள்ளேன் ....












Saturday 25 October 2014

காளான் சூப்





தேவையான பொருட்கள் :



சின்ன வெங்காயம் -10
தக்காளி -1
காளான் -10
இஞ்சி -1 இஞ்ச் 
பூண்டு -8 பல்லு 
மஞ்சள் தூள் -1/2 தே .கரண்டி 
மல்லித்தூள் -1/2 தே .கரண்டி 
மிளகாய்த்தூள் -1/2 தே .கரண்டி 
சீரகம் -1/2 தே .கரண்டி 
நல்லெண்ணெய்  -1/2 மே .கரண்டி 
கொத்தமல்லி -1/2 கைப்பிடி 
உப்பு -தே .அளவு 




செய்முறை :

காளானை சுத்தம் செய்து அரிந்து கொள்ளவும்


இஞ்சி ,பூண்டை தட்டி வைத்து கொள்ளவும்


சின்ன வெங்காயம்,தக்காளி,கொத்தமல்லி ஆகியவற்றை அரிந்து கொள்ளவும்

குக்கரில் 1கப்  தண்ணீர் விட்டு கொதிவந்தவுடன் காளானை போட்டு மற்ற
எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக போடவும் .உப்பு சேர்த்து கொதி வந்தவுடன் குக்கரை மூடி விசில் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து 3 விசில் விடவும் .





குக்கரை திறந்து நல்லெண்ணெய் விட்டு பரிமாறவும்.







Wednesday 15 October 2014

உருளைகிழங்கு சாதம்





தேவையான பொருட்கள் :

அரிசி -1கப் 
உருளைக்கிழங்கு -2(பெரியது)
வரமிளகாய் -2
தனியாவிதை -1 மே .க 
கடலை பருப்பு -1தே .க
உளுத்தம்பருப்பு -1தே .க 
பெருங்காயம் -1/4 தே .க
மஞ்சள்தூள் -1/2 தே .க
முந்திரி பருப்பு -10
எண்ணெய் -2 மே .க
கடுகு -1/4 மே .க 
கருவேப்பிலை-தாளிக்க 
கொத்தமல்லி
நெய் - 1/2 மே .க
உப்பு -தே .அ 



செய்முறை :


அரிசியை வேக வைத்து சாதம் தயாரித்து அதனுடன் நல்லெண்ணெய் விட்டு 
கிளறி தனியாக வைக்கவும் .

உருளைகிழங்கை  குக்கரில்  2 விசில் வைத்து தோலை உரித்து துண்டுகளாக வெட்டி கொள்ளவும் .


கடாயில்1மே.க எண்ணெய்  விட்டுஉளுத்தம்பருப்பு,தனியா,
கடலைபருப்பு,வரமிளகாய்,பெருங்காயம் ஆகியவற்றை வறுத்து ஆறியவுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடி செய்யவும் .




அதே கடாயில் 1மே .க எண்ணெய்  விட்டு கடுகு,முந்திரி,கருவேப்பிலை
தாளித்து மஞ்சள்தூள்,அரைத்த பொடி,உருளைக்கிழங்கு போட்டு நன்றாக கிளறவும் .மிதமான தீயில் பச்சை வாசனை போகும் வரை கிளறி (அவ்வப்போது தேவைப்பட்டால் எண்ணெய் சேர்க்கவும்) பிறகு சாதத்தை போட்டு நெய் விட்டு கொத்தமல்லி தூவி கிளறி இறக்கவும் .






உருளைக்கிழங்கு சாதம் தயார் .









Thursday 9 October 2014

கசகசா துவையல்....



தேவையான பொருட்கள் : 

 
 கசகசா - 50gm 
 பூண்டு - 20 பல் 
 கருவேப்பிலை -1கைப்பிடி 
 தேங்காய் துருவல் -1/2கப் 
 மிளகாய் வத்தல் -2
 புளி -நெல்லிக்காய் அளவு
 எண்ணெய் -1மேஜைக்கரண்டி  
 உப்பு -தேவையானஅளவு 

செய்முறை :


கசகசாவை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுக்கவும்.அதை மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைக்கவும் .



அதே வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு பூண்டு,கருவேப்பிலை,தேங்காய் துருவல்,மிளகாய் வத்தல்  ஆகியவற்றை வதக்கவும்.

அரைத்த கசகசாவுடன் வதக்கிய பொருட்களையும்,புளி ,உப்பு போட்டு தண்ணீர் விட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.



இந்த துவையல் கலவை சாதத்திற்கு பொருத்தமாக இருக்கும்.