தேவையான பொருட்கள் :
பீட்ரூட் (துருவியது)-1 கப்
தேங்காய் துருவல் -4 மே .கரண்டி
பொட்டுக்கடலை -4 மே .கரண்டி
இஞ்சி -2 இஞ்ச்
பூண்டு -5 பல்லு
பச்சை மிளகாய் -2
கருவேப்பிலை -1/2 கைப்பிடி
சோம்பு -2 தே .கரண்டி
உப்பு-தே .அளவு
எண்ணெய் -பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
பீட்ரூட் தவிர மற்ற எல்லா பொருட்களுடன் உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் அரைத்து கொள்ளவும் .
அரைத்த கலவையுடன்,பீட்ரூட் துருவல் போட்டு ஒன்றாக கலந்து வைக்கவும்
கலந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும் .
கலர்புல் பீட்ரூட் கோலா ரெடி .....
பீட்ரூட் நிறத்தை வைத்து சிலருக்கு பிடிக்காது,ஆனால் அதில் இருக்கும் சத்துக்கள் ஏராளம் ..
பொதுவாக பீட்ரூட் பொரியல் ,கூட்டு ,சாதம் என செய்வதை விட இது கொஞ்சம் வித்தியாசமான ரெசிபி...
தேவையான பொருட்கள் :
வறுக்காத ரவை -1 கப்
சர்க்கரை -2 கப்
எண்ணெய் -பொரிக்க தேவையான அளவு
கேசரி பவுடர் -1 சிட்டிகை
ஏலக்காய் -4
செய்முறை :
ரவையுடன் கேசரி பவுடர் சேர்த்து தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு போல கெட்டியாக பிசைந்து அப்படியே 2 மணி நேரம் வைக்கவும் .
இந்த மாவில் சிறிது எண்ணெய் சேர்த்து நன்றாக பிசைந்து வட்டமாக (சப்பாத்தி மாதிரி )தேய்த்து கொள்ளவும் .
வாணலியில் எண்ணெய் காய வைத்து ஒவ்வொரு வட்டமாக பொரித்து எடுத்து தனியாக வைக்கவும் .
இனி சர்க்கரை பாகு காய்ச்ச சர்க்கரை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு,ஏலக்காய் சேர்த்து கம்பி பதம் வந்தவுடன் இறக்கி பொரித்து வைத்த வட்டங்களை ஒவ்வொன்றாக போட்டு சிறிது ஊறிய பின் பரிமாறவும் .
பார்த்தவுடன் நாவில் சுவை ஊறும் ஜீரா போளி ரெடி ...
தீபாவளிக்கு ஏதாவது வித்தியாசமான இனிப்பு வகை செய்ய நினைத்த போது சிறு வயதில் சாப்பிட்ட ஜீரா போளி ஞாபகம் வந்தது .செய்து பார்த்தேன், நன்றாக வந்தது அதை உங்களுடன் பகிர்ந்துள்ளேன் ....
தேவையான பொருட்கள் :
சின்ன வெங்காயம் -10
தக்காளி -1
காளான் -10
இஞ்சி -1 இஞ்ச்
பூண்டு -8 பல்லு
மஞ்சள் தூள் -1/2 தே .கரண்டி
மல்லித்தூள் -1/2 தே .கரண்டி
மிளகாய்த்தூள் -1/2 தே .கரண்டி
சீரகம் -1/2 தே .கரண்டி
நல்லெண்ணெய் -1/2 மே .கரண்டி
கொத்தமல்லி -1/2 கைப்பிடி
உப்பு -தே .அளவு
செய்முறை :
காளானை சுத்தம் செய்து அரிந்து கொள்ளவும்
இஞ்சி ,பூண்டை தட்டி வைத்து கொள்ளவும்
சின்ன வெங்காயம்,தக்காளி,கொத்தமல்லி ஆகியவற்றை அரிந்து கொள்ளவும்
குக்கரில் 1கப் தண்ணீர் விட்டு கொதிவந்தவுடன் காளானை போட்டு மற்ற
எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக போடவும் .உப்பு சேர்த்து கொதி வந்தவுடன் குக்கரை மூடி விசில் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து 3 விசில் விடவும் .
குக்கரை திறந்து நல்லெண்ணெய் விட்டு பரிமாறவும்.