Wednesday, 15 April 2015

பிரண்டைக்குழம்பு

தேவையான பொருட்கள்:
பிரண்டை -2 கட்டு
புளி - 2 பெரிய நெல்லிக்காய் அளவு (புளியை  தண்ணீரில் கெட்டியாக கரைத்து புளிச்சாறு எடுத்து வைக்கவும்)
மசாலாப்பொடி(மல்லி &மிளகாய் கலந்த பொடி)-காரத்திற்கு( 3 மே.கரண்டி சேர்த்துள்ளேன்) 
உப்பு -தே.அளவு

தாளிக்க :

நல்லெண்ணெய் -2குழிக்கரண்டி
வெந்தயம் -1தே.கரண்டி
கருவேப்பிலை -தாளிக்க தே.அளவு
சின்ன வெங்காயம்-1கப்
பூண்டு -1கப்
தக்காளி -3 (நறுக்கியது)


அரைக்க:

தேங்காய் -1/2கப்(கொஞ்சம் போட்டாலே போதும்)
சோம்பு -1தே.கரண்டி
சின்னவெங்காயம்-6செய்முறை:

பிரண்டையை  மேல் தோல் எடுத்துட்டு சுத்தம் செய்து கட் பண்ணி வைக்கவும்.


தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து,பிரண்டையை போட்டு நன்கு வதக்கவும்.(பிரண்டையை  நல்லா வதக்கினால் தான் நாக்கில் அரிப்பு வராது,பிரண்டை வதக்கும் போது  நிறம் மாறும்)பின் மசாலாப்பொடி சேர்த்து 1/2நிமிடம் வதக்கி,உப்பு,மஞ்சள்தூள் போட்டு,அரைத்த தேங்காய் கலவை சேர்த்து 1நிமிடம் வதக்கி,புளிக்கரைசல் சேர்த்து நன்கு கலக்கிவிடவும்.
கொதி வந்தவுடன் மிதமான தீயில் வைத்து பிரண்டை வேகவிடவும்.


பச்சை வாசனை போய், எண்ணெய் பிரிந்து, பிரண்டை வெந்தவுடன்

கொத்தமல்லி தூவி  இறக்கவும்.

சூடான சாதம்,இட்லி,தோசை ஆகியவற்றிக்கு பிரண்டைக்குழம்பு சூப்பராக இருக்கும்.மறுநாள் வைத்து சாப்பிட இன்னும் சுவையாக இருக்கும்.
குறிப்பு:
பிரண்டை சீக்கிரம் வெந்துவிடும், வேகும் பதம் தெரியலையினா ,
புளிக்கரைசல் சேர்த்து கொதி வந்தவுடன் குக்கரில் 1விசில் வைக்கவும்.


பிரண்டை பற்றிய பயனுள்ள  தகவல் 


                                                                                                                      நன்றி - Peppers TV
வாழ்க வளமுடன்.....

18 comments:

 1. பிரண்டை குழம்பு ஸூப்பர் காணொளி கண்டேன் பயனுள்ள தகவல்கள் நன்றி.
  கில்லர்ஜி

  ReplyDelete
  Replies
  1. பிரண்டை பற்றிய நான் பார்த்த காணொளியை,அனைவருடன் பகிர்ந்திடவே இந்த முயற்சி...
   முதலில் வந்து கருத்திட்டமைக்கு நன்றி....

   வாழ்க வளமுடன்....

   Delete
 2. பிரண்டை குழம்பு செயல்முறை விளக்கம் அருமை சகோ!
  இட்லிக்கு சட்னி/சாம்பார் போய் இப்போது தொட்டுக் கொள்ள புதிய வகை குழம்பு ரெடி!

  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. இந்த புதிய வகை குழம்பை ருசித்து சாப்பிடுங்கள்...
   தங்கள் பாராட்டுக்கு நன்றி...

   வாழ்க வளமுடன்....

   Delete
 3. இதுவரை செய்ததில்லை... உங்களின் குறிப்பின் படி செய்து பார்க்கிறோம்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. செய்து சாப்பிட்டு மகிழுங்கள்...நன்றி...

   வாழ்க வளமுடன்...

   Delete
 4. மருத்துவ குணம் நிறைந்த பிரண்டையையும் மனிதர்கள் அழிவின் விளிம்பிற்குக் கொண்டு சென்று விட்டார்கள்..

  கேட்பாரற்று வேலிகளில் கிடக்கும் பிரண்டைக் குழம்பினைப் பற்றிக் கேள்விப்பட்டதுண்டு.. சாப்பிட்டதில்லை.. இனியதொரு பதிவு கண்டு மகிழ்ச்சி. வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. நல்லது அனைத்தையும் அழித்துவிடுவது தானே மனிதன் இயல்பு....
   கேட்பாரற்று கிடக்கும் சில செடி கொடிகளில் தான் அத்துனை மருத்துவ குணம் உள்ளது.
   நன்றி...

   வாழ்க வளமுடன்....


   Delete
 5. பிரண்டை குழம்பு இது வரை செய்ததில்லை. உங்கள் செய்முறைப்படி கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. செய்து பார்த்து,உண்டு மகிழுங்கள்....
   நன்றி...

   வாழ்க வளமுடன்...

   Delete
 6. பிரண்டை எத்துனை மருத்துவ குணம் நிறைந்தது என்பது இன்று உள்ள இளைய தலைமுறைக்கு தெரியாது.செயல்முறை விளக்கம் அருமை. நன்றி.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான்,பிரண்டையே நிறைய பேருக்கு தெரியுமானு தெரியல?
   நன்றி...

   வாழ்க வளமுடன்...

   Delete
 7. எங்கள் வீட்டில் பிரண்டை சட்னி செய்வார்கள். பிரண்டை குழம்பு இதுவரை சாப்பிட்டதும் இல்லை. தங்கள் செய்முறையை பார்த்தவுடன் செய்து சாப்பிட ஆவலாக உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வீட்டில் குழம்பு செய்ய சொல்லி சாப்பிட்டு பாருங்கள்,அப்புறம் வாரம் ஒரு முறை வீட்டில் பிரண்டைக்குழம்பு மணக்கும்...
   எங்க வீட்ல அப்படிதான் நடக்குது....

   நன்றி...

   வாழ்க வளமுடன்...

   Delete
 8. வாருங்கள் சகோதரி பதிவினை காண்பதற்கு!
  பாரிசில் பட்டிமன்ற தர்பார்
  http://kuzhalinnisai.blogspot.com/2015/04/blog-post_20.html
  வாக்கோடு வருகை தர வேண்டுகிறேன்.
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
 9. உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
  இனிய "உழைப்பாளர் தினம் (மே 1) நல்வாழ்த்துகள்"
  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com

  ReplyDelete
 10. வணக்கம் சகோ.
  பிரண்டைத் துவையல் செய்வோம் வீட்டில்.
  குழம்பு செய்யத் தெரியாது.
  இன்று குறித்துக் கொண்டோம்.
  உடலின் உள்ளுறுப்புகளில் தோன்றும் இரத்தக் கசிவு, கட்டிகளுக்கு நல்லது எனப் படித்திருக்கிறோம்.

  மிகப் பயனுள்ள பதிவு தொடர்கிறேன்.

  நன்றி.

  ReplyDelete
 11. அருமை அருமை

  ReplyDelete