Sunday 15 February 2015

வெந்தய கீரை குழம்பு


வெந்தய கீரை பற்றி நான் அறிந்த தகவல்களில் சில...
              புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும்
                     உடலுக்கு நல்ல பலம் தரும்
                           உடல் சூட்டை தணிக்கும்

வெந்தய கீரையின்  கசப்பினால்,சிலருக்கு அது பிடிக்காது.
நல்லது கசக்கத்தானே செய்யும்...

அந்த கசப்பு தெரியாமல் இருக்க, சில வகையறாக்கள் சேர்த்து குழம்பு செய்து பார்த்தேன் ,நன்றாக வந்தது.

கசப்பில்லா வெந்தய கீரை குழம்பு இதோ உங்களுக்கும்.....////



தேவையான பொருட்கள் :
தாளிக்க :
நல்லெண்ணெய் -2 மே.கரண்டி 
விளக்கெண்ணை -10 சொட்டு 
கடுகு -1/4 தே.கரண்டி
உளுந்து -1/4தே.கரண்டி
சீரகம் -1/4தே.கரண்டி
மிளகு -1/4தே.கரண்டி
வெங்காயம்(சிறியது )-15
பூண்டுப்பல் -10
கருவேப்பிலை -1/2 கைப்பிடி
பச்சை மிளகாய் -1
வெந்தயக்கீரை -1கட்டு

அரைக்க :
சோம்பு-1/2தே .கரண்டி
பெருங்காயம் -1/4தே.கரண்டி 
தக்காளி -2
புளி -சிறு நெல்லிக்காய் அளவு
தேங்காய் துருவல்-3மே.கரண்டி
வெல்லம் -சிறு துண்டு(சிறு நெல்லிக்காய் அளவு)
மிளகாய்ப்பொடி(மல்லி,மிளகாய் கலந்தது)-2 மே.கரண்டி (காரத்திற்கு ஏற்ப சேர்க்கவும்)
உப்பு-தே.அளவு



செய்முறை :

கடாயில் நல்லெண்ணெய்விட்டுகாய்ந்தவுடன் ,கடுகு,உளுந்து,சீரகம்,
மிளகு,கருவேப்பிலை  ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்க்கவும்.




பின் வெங்காயம்,பூண்டு,பச்சைமிளகாய்  போட்டு வதக்கவும்.கடைசியாக அரிந்த கீரையை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். பிறகு அரைத்த கலவையை சேர்த்து 5 நிமிடம் வதக்கி,2 டம்ளர் தண்ணீர் விட்டு
நல்லா கொதி வந்தவுடன் விளக்கெண்ணை விட்டு,அடுப்பை மிதமான தீயில் 15 நிமிடம் வைக்கவும்.இடையிடையே நன்கு கிளறிவிடவும்,எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும்..

சூடான சாதத்துடன் குழம்பு விட்டு அப்பளம் வைத்து  சாப்பிட்டால் சுவையோ சுவை!!!!!!!!

வாழ்க வளமுடன் ....


6 comments:

  1. வணக்கம்
    சுவையான உணவு செய்முறை விளக்கம் நன்று... பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தொடர் வருகை தந்து,கருத்து சொல்லி ஊக்கம் தருவதற்கு நன்றி ..

      வாழ்க வளமுடன் ...

      Delete
  2. வெந்தய கீரை குழம்பு மண்சட்டியில் செய்திருப்பது மிக அருமை சரிதா.

    ReplyDelete
    Replies
    1. மண்சட்டியில் வைக்கும் குழம்பின் சுவை உங்களுக்கே தெரியும்,அந்த சுவையால் தான் நான் மண்பானை சமையலுக்கு மாறிட்டேன்,தங்கள் பாராட்டுக்கு நன்றி...

      வாழ்க வளமுடன்...

      Delete
  3. வெந்தய கீரை குழம்பு செய்முறை விளக்கம் நன்று... பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  4. தங்கள் முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி...

    வாழ்க வளமுடன்

    ReplyDelete