Saturday 7 March 2015

சோளப்பணியாரம்



சோள அரிசி பற்றிய குறிப்புகளில்  சில,

சோளத்தில் உடலுக்கு தேவையான ஆற்றல், புரதம், உயிர் சத்துகள் மற்றும் தாது உப்புகள் அதிக அளவில் இருக்கின்றன. 
அரிசி சார்ந்த உணவை விடசோள உணவு சத்துள்ள உணவாக கருதப்படுகிறது. 
மேலும் சோளம் இதய நோய்கள், ரத்த கொதிப்பு மற்றும் நீரிழிவு நோய் வருவதையும் குறைக்கும்.

இத்தகைய சத்தான சோள அரிசியை வைத்து சுவையான  பணியாரம் செய்யலாமா?????

தேவையான பொருட்கள்:
பச்சரிசி -1கப்
புழுங்கல் அரிசி -1கப்
வெள்ளை சோள அரிசி -1கப்
உளுந்து -1/4கப்
உப்பு -தே.அளவு
கருவேப்பிலை -1/4கைப்பிடி(நறுக்கியது)
கொத்தமல்லி -1/4(நறுக்கியது )

தாளிக்க :
எண்ணெய் -1மே.கரண்டி
கடுகு -1/4தே.கரண்டி
உளுந்து -1/4தே.கரண்டி
பச்சைமிளகாய்-2(நறுக்கியது)
பெரிய வெங்காயம் -1(பொடியாக நறுக்கியது)

செய்முறை:

அரிசி,சோளம்,உளுந்து ஆகியவற்றை  3மணி நேரம் ஊறவைத்து, நைசாக அரைத்து உப்பு  சேர்த்து கரைத்து வைக்கவும்.



அடுத்த நாள் மாவுடன் ,தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்த்து,கருவேப்பிலை,கொத்தமல்லி போட்டு நன்றாக கலக்கவும்.



பணியாரச்சட்டியில் எண்ணெய் தடவி சட்டி காய்ந்தவுடன் மாவை ஊற்றவும்.

எண்ணெய் விட்டு வேகவிடவும்.(அடுப்பை மிதமான தீயில் வைத்து)

திருப்பி விட்டு  மறுபுறமும் வேகவிடவும்.



இருபுறமும் வெந்தவுடன் எடுக்கவும்.

சுவையான சோளப்பணியாரத்தை  தக்காளி சட்னியுடன் சாப்பிடவும்.




வாழ்க வளமுடன் ...







24 comments:

  1. சோளப்பணியாரம் செய்முறையும், விளக்கப்படங்களும் மிக அருமை சரிதா.அம்மா வீடு உங்களை விட்டுடுச்சு போல !

    ReplyDelete
  2. தங்கள் கருத்துக்கு நன்றி...
    அம்மா வீடு என்னை விட்டுடுச்சு,என் மனசை தான் விடவில்லை...

    வாழ்க வளமுடன்...

    ReplyDelete
  3. மிக அருமையான பணியாரம்! சிறுதான்யத்தில் செய்தது என்பதால் மிகவும் சத்தானதும் கூட! விரைவில் செய்து பார்த்து சொல்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை,கருத்து எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது,நன்றி..
      சுவைத்துவிட்டு தங்கள் அனுபவத்தை பகிருங்கள்..

      வாழ்க வளமுடன்..

      Delete
  4. தஞ்சையம்பதிக்கு வந்து கருத்துரைத்தற்கு மகிழ்ச்சி..
    வாழ்க நலம்..

    ReplyDelete
    Replies
    1. "பெண்மை வெல்க " போல் அருமையான தகவல்களுடன் பல பதிவுகளை தர வாழ்த்துக்கள்...

      நன்றி...
      வாழ்க வளமுடன்

      Delete
  5. இந்த சோள பணியாரம் எல்லாம் சிறு வயதில் சாப்பிட்டது..
    ஆனால் அது வெல்லம் கலந்த இனிப்பு பணியாரம்.
    எங்கள் ஆச்சி சுட்டெடுப்பார்கள் .. தெருவெல்லாம் மணக்கும்..
    இந்த சோளப் பணியார செய்முறைக் குறிப்பு எளிமையாக உள்ளது.
    நல்லதோர் பதிவு கண்டு மகிழ்ச்சி..

    ReplyDelete
  6. தங்கள் முதல் வருகைக்கு மகிழ்ச்சி,
    கருத்துரைத்தமைக்கு நன்றி...

    வாழ்க வளமுடன்...








    ReplyDelete
  7. வணக்கம்

    சோளப்பணியாரம் செய்யும் முறை பற்றிய விளக்கம் நன்று நிச்சயம் செய்து பார்க்கிறோம்.. பகிர்வுக்குநன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் தொடர் வருகைக்கு நன்றி...
      நிச்சயம் செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்...

      வாழ்க வளமுடன்...

      Delete
  8. இதைத்தானே முக்குழி என்று சொல்வது ?

    ReplyDelete
    Replies
    1. நம்ம தென் மாவட்டங்களில் அப்படி சொல்வதுண்டு...
      தங்கள் வருகைக்கு நன்றி...

      வாழ்க வளமுடன்...

      Delete
  9. தங்களது தளத்தில் இணைத்துக்கொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் இத்தளத்தில் இணைந்தது மிகவும் மகிழ்ச்சி...
      தொடர்ந்து தங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...
      நன்றி...

      வாழ்க வளமுடன்...

      Delete
  10. சோளப்பணியாரமும் கார சட்டினியும்...அருமையா இருக்கு...சிறுதானியம் இங்கு கிடைக்காது. ஊருக்கு வரும் போது தான் வாங்கி வரணும். அம்மா வீட்டுக்கு போய் வந்தாச்சு....அனைவரும் நலமா...?

    ReplyDelete
  11. அனைவரும் நலம் ஆன்ட்டி..
    ஊருக்கு வரும் போது சிறுதானியங்கள் வாங்கி கொண்டு செல்லுங்கள்,அரிசிய விட இது நல்லதுதானே..
    தங்கள் கருத்துக்கு நன்றி...

    வாழ்க வளமுடன்....

    ReplyDelete
  12. சத்தான உணவுதான்
    யார் செய்து தருவாங்க ம்ம்ம்ம் !

    அருமை பயனுள்ள பதிவுகள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் முதல் வருகை எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
      கருத்துரைத்தமைக்கு நன்றி....

      வாழ்க வளமுடன்....

      Delete
  13. நேற்று செய்து பார்த்தோம்... நன்றி...

    தொடர்கிறேன்...

    ReplyDelete
  14. தங்கள் முதல் வருகைக்கு நன்றி...
    செய்து பார்த்தீர்களா? நன்றாக இருந்ததா?
    நன்றி...
    வாழ்க வளமுடன்....

    ReplyDelete
  15. பார்க்கும் பொழுதே சாப்பிட வேண்டும் என்றுதான் தோன்றுகிது.
    என்னை விட்டுவிட்டுச் செய்து சாப்பிடுவர்களின் வயிறு வலிக்கக் கடவது. :))

    ReplyDelete
  16. தங்கள் முதல் வருகைக்கு நன்றி...
    அப்படியா அப்போ எனக்கு தான் முதல்ல வயிறு வலிக்க போகுது!!!
    சொல்லும் போதே வலிக்கிறமாதிரி இருக்கு ...
    தங்கள் கருத்துக்கு நன்றி....

    வாழ்க வளமுடன்...

    ReplyDelete
  17. சோளப்பணியாரம் படங்களுடன் தந்திருப்பது அருமை. சோளத்தைப்பற்றிய சிறு தகவலும் சூப்பர்.

    ReplyDelete
  18. முள் தொண்டையில் சிக்கியபின் உணர்கிறேன் தூண்டிலின் ரணம். அருமையான வரி..தங்கள் தளத்திற்கு தற்போதுதான் வந்துள்ளேன் . இன்னும் சிறப்பாக நிறைய பதிவுகள் எழுத வாழ்த்துக்கள்.

    ReplyDelete