Wednesday 29 October 2014

ஜீரா போளி



தேவையான பொருட்கள் :

வறுக்காத ரவை -1 கப் 

சர்க்கரை -2 கப் 
எண்ணெய் -பொரிக்க தேவையான அளவு 
கேசரி பவுடர் -1 சிட்டிகை 
ஏலக்காய் -4






செய்முறை :


ரவையுடன் கேசரி பவுடர் சேர்த்து தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு போல கெட்டியாக பிசைந்து அப்படியே 2 மணி நேரம் வைக்கவும் .






இந்த மாவில் சிறிது எண்ணெய் சேர்த்து நன்றாக பிசைந்து வட்டமாக (சப்பாத்தி மாதிரி )தேய்த்து கொள்ளவும் .





வாணலியில் எண்ணெய் காய வைத்து ஒவ்வொரு வட்டமாக பொரித்து எடுத்து தனியாக வைக்கவும் .










இனி சர்க்கரை பாகு காய்ச்ச சர்க்கரை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு,ஏலக்காய் சேர்த்து  கம்பி பதம் வந்தவுடன் இறக்கி பொரித்து வைத்த வட்டங்களை ஒவ்வொன்றாக போட்டு சிறிது ஊறிய பின் பரிமாறவும் .




பார்த்தவுடன் நாவில் சுவை ஊறும் ஜீரா போளி ரெடி ...






தீபாவளிக்கு ஏதாவது வித்தியாசமான இனிப்பு வகை செய்ய நினைத்த போது சிறு வயதில் சாப்பிட்ட ஜீரா போளி ஞாபகம் வந்தது .செய்து பார்த்தேன், நன்றாக வந்தது அதை உங்களுடன் பகிர்ந்துள்ளேன் ....












2 comments:

  1. அச்சச்சோ...கையில எடுத்து வாயில போடலாம்னு பார்த்தால் முடியலையே..சூப்பர் சரிதா.

    நன்றி
    வாழ்க வளர்க
    உமையாள் காயத்ரி

    ReplyDelete
  2. நன்றி , பார்சல் அனுப்பவா ஆன்ட்டி.....???

    வாழ்க வளமுடன்
    சரிதா

    ReplyDelete