Friday 31 October 2014

பீட்ரூட் கோலா



தேவையான பொருட்கள் :

பீட்ரூட் (துருவியது)-1 கப் 

தேங்காய் துருவல் -4 மே .கரண்டி 
பொட்டுக்கடலை -4 மே .கரண்டி 
இஞ்சி -2 இஞ்ச் 
பூண்டு -5 பல்லு 
பச்சை மிளகாய் -2
கருவேப்பிலை -1/2 கைப்பிடி 
சோம்பு -2 தே .கரண்டி 
உப்பு-தே .அளவு 
எண்ணெய் -பொரிக்க தேவையான அளவு 





செய்முறை:


பீட்ரூட் தவிர மற்ற எல்லா பொருட்களுடன் உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் அரைத்து கொள்ளவும் .





அரைத்த கலவையுடன்,பீட்ரூட் துருவல் போட்டு ஒன்றாக கலந்து வைக்கவும் 





கலந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும் .







கலர்புல் பீட்ரூட் கோலா  ரெடி .....







பீட்ரூட் நிறத்தை வைத்து சிலருக்கு பிடிக்காது,ஆனால் அதில் இருக்கும் சத்துக்கள்  ஏராளம்  .. 



பொதுவாக பீட்ரூட் பொரியல் ,கூட்டு ,சாதம் என செய்வதை விட இது  கொஞ்சம் வித்தியாசமான ரெசிபி...











3 comments:

  1. பீட்ரூட் வடை செய்து இருக்கிறேன். சற்று வேறு விதமாக. உருட்டினால் கோலா என்போம். இதையும் ஒருநாள் செய்ய வேண்டும். கோலா சும்மா இழுக்குது என்னை ஊருக்கு...சூப்பர் சரிதா.

    ReplyDelete
  2. அப்படியா?? சூப்பர்...நன்றி ஆன்ட்டி...

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  3. Need to try one day and in my family, all are interested to eat beetroot.

    ReplyDelete