Friday 13 February 2015

இடியாப்பத்த சி(வி)க்கல் இல்லாம இப்படி சாப்பிடலாம்...


இடியாப்ப சிக்கல எடுக்க ரூம் போட்டு யோசித்தப்ப எனக்கு  கிடைத்த தீர்வு தான்  இது...
 ஹீ  ஹீ  ஹீ ////

தேவையான பொருட்கள் :
இடியாப்பம் -8(உதிர்த்தது)
வெங்காயம் (பெரியது )-2(நறுக்கியது )
தக்காளி -3(பொடியாக நறுக்கியது )
பச்சை மிளகாய் -2(கீறியது )
இஞ்சி -1 இன்ச்
பூண்டு -3
கருவேப்பிலை -1/2 கைப்பிடி
கொத்தமல்லி (அரிந்தது )-1/4 கப்
கடுகு -1/4 தே.கரண்டி
உளுந்து -1/4 தே .கரண்டி
சோம்பு-1/4 தே.கரண்டி
மிளகாய்த்தூள் -1/4 தே.கரண்டி
கரம் மசாலாத்தூள் -1/2 மே .கரண்டி
எண்ணெய் -தாளிக்க தே .அளவு
உப்பு -தே .அளவு



செய்முறை :

கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு ,கடுகு ,உளுந்து ,கருவேப்பிலை போட்டு
தாளிக்கவும் .

பின் வெங்காயம்,பச்சை மிளகாய்,இஞ்சி,பூண்டு (தட்டியது )போட்டு வதக்கி(வெங்காயம் நன்கு வதங்க சிறிது உப்பு சேர்க்கவும்),தக்காளி சேர்த்து நன்கு வதங்கியவுடன் மிளகாய்த்தூள் ,கரம் மசாலாத்தூள்,உப்பு  சேர்த்து நன்கு கிளறவும்.

பச்சை வாசனை போனவுடன்,அடுப்பை அணைத்து விட்டு, இடியாப்பத்தை சேர்த்து நன்றாக கிளறி ,கொத்தமல்லி  செய்து பரிமாறவும் ...

தேங்காய் சட்னி (அ )ஆனியன் ரெய்த்தாவுடன்  சாப்பிடலாம் ///////


6 comments:

  1. வணக்கம்

    சுவையான உணவுடன் செய்முறை விளக்கத்துடன் பதிவை அசத்தி விட்டீர்கள் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கு நன்றி..

      வாழ்க வளமுடன்

      Delete
  2. Replies
    1. நன்றி ஆன்ட்டி...

      வாழ்க வளமுடன்

      Delete
  3. இடியாப்பத்தை சி ( வி ) க்கல் இல்லாமல் சாப்பிட இப்படி ஒரு வழியா ? மிக அருமை நீங்கள் எனது வலைப்பூவின் உறுப்பினராக சேர்ந்தமைக்கு நன்றி தொடர்ந்து கருத்துக்களை சொல்லுங்கள்.நானும் உங்கள் உறுப்பினராக இணைகிறேன்.

    ReplyDelete
  4. நீங்கள் எனது வலைப்பூவில் மலர்ந்தமைக்கும்,தங்கள் கருத்துக்கும் நன்றி...

    வாழ்க வளமுடன்

    ReplyDelete