Friday 20 February 2015

வாழைப்பூ குழம்பு


இந்த குழம்பு எங்க வீட்ல ரொம்ப பிடிக்கும்....அடிக்கடி செய்வேன்//
அது எப்படினு உங்களுக்கும் சொல்றேன்....

வாழைப்பூ பிரிக்கும் போது பெரிய,நடுத்தர,சிறிய பூக்களை பிரித்து,அதில் நடுத்தர,சிறு பூவை வைத்து இந்த குழம்பு செய்தா நல்லா இருக்கும்,பெரிய பூவை எடுத்து சுத்தம் செய்து வைங்க,அதுக்கு இன்னொரு ரெசிபி தயாரா இருக்கு அத செய்யலாம் ஓகே வா ...



தேவையான பொருட்கள் :
வேக வைத்த வாழைப்பூ -1கப்
வெங்காயம்(சிறியது )-18
தக்காளி -1கப் 
பூண்டு -10
பச்சை மிளகாய் -1
கருவேப்பிலை -1/2பிடி 
வெந்தயம் -1/4தே .கரண்டி 
சோம்பு -1தே.கரண்டி 
மசாலாப்பொடி(மிளகாய்&மல்லிகலந்தபொடி)-2மே.கரண்டி
(காரத்திற்கேற்ப சேர்த்து கொள்ளவும்)
மஞ்சள்பொடி-1/4தே.கரண்டி
உப்பு -தே.அளவு
எண்ணெய் -தாளிக்க தே .அளவு
நல்லெண்ணெய் -1மே .கரண்டி



செய்முறை :
வாழைப்பூவை சுத்தம் செய்து,உப்பு சேர்த்து குக்கரில் 3விசில்விட்டு  வேகவைத்து,தண்ணீரை வடிகட்டி பூவை எடுத்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு வெந்தயம்,சோம்பு போட்டு பொரிந்தவுடன் கருவேப்பிலை, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி வெங்காயம்,பூண்டு(முழுசா) போட்டு நன்கு வதக்கவும்.

பிறகு தக்காளி சேர்த்து வதக்கி (தக்காளி நன்கு வதங்கி கூழ் போல வர வேண்டும்),பின்பு வேக வைத்துள்ள வாழைப்பூ சேர்த்து 5நிமிடம் கிளறவும்.


இப்பொழுது மசாலாப்பொடி,மஞ்சள் பொடி,உப்பு சேர்த்து 3நிமிடம் கிளறி,1+1/2 கப் தண்ணீர் விட்டு கொதி வந்தவுடன் அடுப்பை மிதமான தீயில் வைத்து நல்லெண்ணெய் சேர்த்து 15நிமிடம் கொதிக்க விட்டு(மிதமானதீயில்)எண்ணெய் பிரிந்து வந்தவுடன் இறக்கவும்.




சாதத்திற்கு,தோசைக்கு இந்த வாழைப்பூ குழம்பு சூப்பராக இருக்கும்.

குறிப்பு :
புளிப்பு சுவைகொஞ்சம் அதிகம்  தேவைப்பட்டால்,பெருநெல்லிஅளவு புளியை கெட்டியாக கரைத்து,நல்லெண்ணெய் விட்டவுடன் புளிக்கரைசலை சேர்த்து
எண்ணெய் பிரிந்தவுடன் இறக்கவும்.

வாழ்க வளமுடன் ...

6 comments:

  1. மருத்துவ மணமும், வாசனை மணமும் வீசும் "வாழைப் பூ குழம்பு"
    அயல் நாட்டு ( FRANCE) அடுப்பில் கொதிக்கிறது சகோதரி!
    ஏனெனில் ஆரோக்கியத்தை!
    அள்ளி வழங்கும் குழம்பு அல்லவா?
    நல்ல செயல் முறை விளக்கம் ! பாராட்டுக்கள்!

    நன்றியுடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    (சகோதரி! குழலின்னிசை உறுப்பினராக இணைந்து பதிவை பகிர்ந்திட வேண்டுகிறேன். நன்றி!)

    ReplyDelete
    Replies
    1. ஆம் சகோ,ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் இக்குழம்பை ஒரு முறை ருசித்தால்,நம் நாவும்,மனமும் ஒன்ஸ்மோர் கேட்கும், ருசி பார்த்து அனுபவத்தை பகிருங்கள்...
      தங்கள் கருத்துக்கும்,பாராட்டுக்கும் நன்றி...
      குழலின்னிசையில் நானும் இணைந்துவிட்டேன்...

      வாழ்க வளமுடன்

      Delete
  2. வணக்கம்
    செய்முறை விளக்கத்துடன் அசத்தி விட்டீர்கள் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. வாழைப்பூ குழம்பு சூப்பர் ! நீங்கள் எல்லா குறிப்புகளிலும் மண்சட்டி உபயோகப்படுத்தி செய்வது மிக அருமை. எனக்கு மண்சட்டியில் வைக்கும் குழம்பு மிகவும் பிடிக்கும்.

    ReplyDelete
  4. வாழைப்பூ குழம்பு வாவா எங்கிறதே.....என்னை!!!

    ReplyDelete
  5. அன்பின் அருந்தகையீர்!
    வணக்கம்!

    இன்றைய...
    வலைச் சரத்திற்கு,

    தங்களது
    தகுதி வாய்ந்த பதிவு
    சிறப்பு செய்துள்ளது!

    வருக!
    வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.fr/
    கருத்தினை தருக!

    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete