Thursday 2 April 2015

கோதுமை இடியாப்பம்




கோதுமை இடியாப்பம்,எல்லோரும் சாப்பிட்டிருப்பீர்கள்,எங்களுக்கு மிகவும் பிடித்த சிற்றுண்டி.எளிமையாக செய்யக்கூடியது.

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த,சத்தான ஆகாரம் இது  !!!!  

சுவையான,வாசனையான கோதுமை இடியாப்பம் சாப்பிடலாமா ?????



செய்முறை:

கோதுமையை வாணலியில் வறுத்து,ஆறியபின் மிஷினில் கொடுத்து மாவாக்கி,சலித்து  வைத்துக்கொள்ளவும்.


தேவையான அளவு மாவை எடுத்து,உப்பு போட்டு சுடுதண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு போல(கொஞ்சம் தளர்வாக பிசைந்தால் இடியாப்பம் பிழிய எளிமையாக இருக்கும்) பிசைந்து கொள்ளவும்.மாவு பிசையும் போதே நல்லா வாசனையாக இருக்கும்.


இடியாப்பத் தட்டில் எண்ணெய் தடவி, இடியாப்ப உரலில் மாவை வைத்து தட்டில் பிழிந்து,இட்லி பாத்திரத்தில் வைத்து வேக விடவும். வேகும் போதும்,வாசனை கமகமக்கும்.





இடியாப்பம் வெந்தவுடன் தேங்காய் துருவல்,நெய்,சர்க்கரை போட்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
வாழைப்பழம்,தேங்காய் துருவல் சேர்த்தும் சாப்பிடலாம்.



குறிப்பு :
கோதுமை வறுக்கும் போது,பொன்னிறமாக வறுக்கவும்(கருக்கி விடக்கூடாது )

வாணலியில் வறுத்து,மிஷினில் கொடுத்து மாவாக்கி,சலித்து  வைத்துக்கொண்டால் எப்போ வேண்டுமானாலும் இடியாப்பம் செய்யலாம்.





18 comments:

  1. வணக்கம்
    காலை உணவு சாப்பிட்டது போல ஒரு உணர்வு... செய்முறை விளக்கத்துடன் ஒரு அசத்தல் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. அப்போ காலை உணவு "இந்தியா"விலா??
      முதலில் வந்து கருத்தை பதிவிட்டமைக்கு நன்றி ...

      வாழ்க வளமுடன்.....

      Delete
  2. உங்களின் செய்முறைப்படி செய்து பார்க்கிறோம்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. செய்து பார்த்து தங்கள் கருத்தை பதிவிடுங்கள்,நன்றி...

      வாழ்க வளமுடன்..

      Delete
  3. ஆஹா புதுமையாக இருக்கிறதே...?

    ReplyDelete
    Replies
    1. நம்ம அன்றாடம் உணவுகளை சிறு சிறு வித்தியாசமான சுவைகளில் சாப்பிட்டால் நன்றாக இருக்குமல்லவா???
      நன்றி...

      வாழ்க வளமுடன்.....

      Delete
  4. அருமையான காலை உணவு..
    இடியாப்பத்திற்கு - தேங்காய் துருவல்,நெய்,சர்க்கரை - சரியான கூட்டணி..

    இனிய பதிவிற்கு மகிழ்ச்சி..

    ReplyDelete
    Replies
    1. அந்தந்த உணவுகளை அதன் சரியான கூட்டணியுடன் சாப்பிட்டால் சந்தோஷமாக அனுபவித்து சாப்பிடலாமல்லவா???
      நன்றி...

      வாழ்க வளமுடன்....

      Delete
  5. கோதுமை இடியாப்பம் செய்முறை விளக்கப்படங்கள் மிக அருமை சரிதா !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பாராட்டை பதிவிட்டமைக்கு நன்றி...

      வாழ்க வளமுடன்...

      Delete
  6. கோதுமை இடியாப்பம் புதிய மெனு, செய்து பார்த்து பதில் சொல்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. செய்து பார்த்து தங்கள் கருத்தை பதிவிடுங்கள்...
      நன்றி...

      வாழ்க வளமுடன்....

      Delete
  7. அன்பு சகோதரி.!
    வணக்கம்!
    மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
    இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு
    WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

    சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக!

    நித்திரையில் கண்ட கனவு
    சித்திரையில் பலிக்க வேண்டும்!
    முத்திரைபெறும் முழு ஆற்றல்
    முழு நிலவாய் ஒளிர வேண்டும்!


    மன்மத ஆண்டு மனதில்
    மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
    மங்கலத் திருநாள் வாழ்வில்!
    மாண்பினை சூட வேண்டும்!

    தொல்லை தரும் இன்னல்கள்
    தொலைதூரம் செல்ல வேண்டும்
    நிலையான செல்வம் யாவும்
    கலையாக செழித்தல் வேண்டும்!

    பொங்குக தமிழ் ஓசை
    தங்குக தரணி எங்கும்!
    சீர்மிகு சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக! வருகவே!

    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்,இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்...
      சித்திரை திருநாளை வரவேற்ற தங்கள் கவிதை நன்றாக உள்ளது...
      நன்றி...

      வாழ்க வளமுடன்...

      Delete
  8. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !!

    ReplyDelete
    Replies
    1. நன்றி அம்மா,
      தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் எனது குடும்பத்தாரின் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்....

      வாழ்க வளமுடன்...

      Delete
  9. பார்த்தால் பசி தீரும் என்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்....! :))
    நன்றி சகோ.

    ReplyDelete