Friday 22 May 2015

கோதுமை கொழுக்கட்டை



சித்திரை திருவிழாவிற்கு பின் என்னுடைய பதிவு ....





தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு (வறுத்த கோதுமையில் அரைத்த மாவு,கோதுமை
இடியாப்பம் செய்முறையில் அதை வறுக்கும் முறை கூறியுள்ளேன் )
உப்பு
சர்க்கரை
தேங்காய்த் துருவல்



செய்முறை:

கோதுமை மாவில் உப்பு சேர்த்து,சுடுதண்ணீர் விட்டு,இடியாப்பத்திற்கு போல பிசைந்து கொள்ளவும்.



அந்த மாவை சிறிது எடுத்து உருண்டை உருட்டி,தட்டிக்கொள்ளவும் (புகைப்படத்தில் உள்ளது போல)



அதில் சர்க்கரை,தேங்காய்த்துருவல் வைத்து தட்டியதை மடக்கி ஓரங்களை மூடி விடவும்.



இதை இட்லி பாத்திரத்தில் வைத்து வேகவிடவும்.

சூடா ஆவி பறக்க கோதுமை கொழுக்கட்டை ரெடி .....





பசங்களுக்கெல்லாம் விடுமுறை தினமான இப்பொழுது மாலை நேரத்தில் ஏதாவது ஸ்நாக்ஸ் செய்யணுமா???
சத்தான,சுவையான,எளிமையான, வித்தியாசமான இந்த கொழுக்கட்டை செய்து கொடுங்க..... 



குறிப்பு :
இதை வறுத்த கோதுமையில் அரைத்த மாவில் தான் செய்ய வேண்டும்.
இந்த மாவு அரைத்து வச்சுகிட்டா எப்போ வேண்டுமானாலும் இடியாப்பம்,கொழுக்கட்டை செய்து சாப்பிடலாம். 


வாழ்க வளமுடன்....



16 comments:

  1. ஆஹா கொழுக்கட்டை படமே அழகாக இருக்கிறதே...
    சகோ நலம்தானே... காணவில்லையே....

    ReplyDelete
    Replies
    1. நலம்,சித்தரை திருவிழாவிற்கு சென்றிருந்தேன்,
      தங்கள் வருகைக்கு நன்றி...

      வாழ்க வளமுடன்....

      Delete
  2. வணக்கம்
    பார்த்தவுன் எனக்கும் பசி எடுத்து விட்டது... ஆகா...ஆகா.
    செய்முறை விளக்கத்துடன் அசத்தி விட்டீர்கள் நிச்சயம் செய்து பார்க்கிறோம் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை தந்து கருத்திட்டமைக்கு நன்றி...

      வாழ்க வளமுடன்...

      Delete
  3. செய்துப் பார்த்தால் போகுது. எளிய செயல்மறை விளக்கம். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை பதிவிட்டமைக்கு நன்றி...

      வாழ்க வளமுடன்...

      Delete
  4. ஆஹா,...சூப்பர் சரிதா பார்ஸல் ப்ளீஸ்....)))))))......

    ReplyDelete
    Replies
    1. பார்சல் அனுப்புகிறேன் ஆன்ட்டி,தங்கள் கருத்திற்கு நன்றி...

      வாழ்க வளமுடன்...

      Delete
  5. வாவ்...! சூப்பர்...!

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும்,பாராட்டுக்கு நன்றி ...

      வாழ்க வளமுடன்...

      Delete
  6. கோதுமை கொழுக்கட்டை - செய்முறைப் பக்குவம் பயனுள்ளது. மகிழ்ச்சி..
    வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்து எனக்கும் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது...நன்றி...

      வாழ்க வளமுடன்...

      Delete
  7. கோதுமை கொழுக்கட்டை பார்க்கவே சூப்பரா இருக்கு சரிதா.

    என்னுடைய பதிவு திருநெல்வேலி அல்வா ! கருத்திட வாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி அம்மா...
      இதோ வருகிறேன்...

      வாழ்க வளமுடன்...

      Delete
  8. அடடா..என்க்கு பிடிக்கவே பிடிக்காத கோதுமையிலேயே இப்படி ஒரு உணவா? அற்புதம்...
    அம்மா

    ReplyDelete
  9. அருமை..தொடர்கிறேன்

    ReplyDelete