Tuesday 11 November 2014

காளான் அரைத்து விட்ட குழம்பு




காளான்  குழம்பே கொஞ்சம் வித்தியாசமா செய்ய யோசித்தேன்,அப்போ கிடைத்த குழம்பு தான் மஸ்ரூம் அரைச்சு விட்ட குழம்பு...

மசாலா எல்லாம் சாதாரணமாக சேர்ப்பது தான் ...செய்முறை மட்டும் தான் கொஞ்சம் வித்தியாசம் ...

எப்படினு பார்க்கலாமா ???



தேவையான பொருட்கள்:




காளான்  -1பாக்கெட்
நறுக்கிய பெ .வெங்காயம் -2
நறுக்கிய தக்காளி -2
புதினா -1/2 கைப்பிடி
கொத்தமல்லி -1/2 கைப்பிடி
நெய் -1/2 தே.கரண்டி
மசாலாப்பொடி(மல்லி & மிளகாய் கலந்த பொடி)-2 மே .கரண்டி
எண்ணெய் -1 மே.கரண்டி

வறுத்து அரைக்க,




பட்டை-1 இன்ச்
கிராம்பு -1
பிரியாணி இலை -2
சோம்பு -2 தே.கரண்டி
கருவேப்பிலை -1 கைப்பிடி
தேங்காய்(நறுக்கியது)-1 கப்
எண்ணெய் -1 தே .கரண்டி 


செய்முறை :

காளானை கட் செய்து சுடுதண்ணீரில் போட்டு அலசி வடிகட்டி எடுத்து வைக்கவும் .

எண்ணெய் ஊற்றி பட்டை,கிராம்பு ,பிரியாணி இலை போட்டு வதக்கவும்,வாசனை வந்தவுடன் கருவேப்பிலை, சோம்பு,தேங்காய் போட்டு பொன்னிறமாகும்வரை வதக்கி,ஆறவைத்து,அரைத்து தனியாக வைக்கவும் .




குக்கரில் எண்ணெய் விட்டு வெங்காயம் ,புதினா போட்டு வதக்கவும்.
பிறகு தக்காளி சேர்த்து வதங்கியவுடன் மசாலாப்பொடி,உப்பு போட்டு 2 நிமிடம் வதக்கி,மஸ்ரூம் சேர்த்து கிளறவும் .

3 நிமிடம் கழித்து அரைத்த கலவை சேர்த்து, 1 நிமிடம் கிளறி தேவையான அளவு தண்ணீர் ,உப்பு  சேர்த்து,கடைசியாக நெய் விட்டு கிளறி மூடி,4 விசில் விட்டு இறக்கவும்.

நறுக்கிய கொத்தமல்லி  தூவி பரிமாறவும் ...






நெய்விட்டிருப்பதால்,எண்ணெய் பிரிந்து குழம்பு பார்க்கவே நன்றாக இருக்கும்!!!





எல்லாவற்றிக்கும்(சாதம்,இட்லி,தோசை,சப்பாத்தி,பூரி) பொருத்தமான குழம்பு இது //////


வாழ்க வளமுடன் 





























1 comment:

  1. மஸ்ரூம் குழம்பு சூப்பர்ர்ர்ர்ர்...!!!

    ReplyDelete