Saturday 8 November 2014

கருணைக்கிழங்கு மசியல்



நம் தாத்தா,பாட்டி காலத்து ரெசிபி இது ...

கருணைக்கிழங்கு குழம்பு,சாம்பார் சாப்பிட்டிருக்கிறேன்,மசியல் இப்போ தான் முதல் தடவை செய்தேன்,நன்றாக இருந்தது....

கருணைக்கிழங்குடன் புளி சேர்த்துள்ளதால் நாக்கில் அரிப்பெல்லாம் வராது .. 

தேவையான பொருட்கள் :

கருணைக்கிழங்கு -8
பச்சைமிளகாய் -3
வரமிளகாய் -2
உளுத்தம்பருப்பு -2 தே.கரண்டி
பொடியாக நறுக்கிய இஞ்சி -2 தே.கரண்டி
பெருங்காயத்தூள் -1 சிட்டிகை
கருவேப்பிலை -1/2 கைப்பிடி
புளி -எலுமிச்சை அளவு
உப்பு-தே .அளவு




செய்முறை:

புளியுடன் தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி தனியாக வைத்துக்கொள்ளவும்.

கருணைக்கிழங்கை உப்பு போட்டு  குக்கரில் 2 விசில் விட்டு வேக வைத்து தோல் உரித்து மசிக்கவும்.




கடாயில் எண்ணெய் ஊற்றி வரமிளகாய் போட்டு,கடுகு,உளுத்தம்பருப்பு,
பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்

பிறகு நறுக்கிய இஞ்சி,நறுக்கிய பச்சைமிளகாய்,கருவேப்பிலை போட்டு கிளறி,வறுபட்டவுடன் புளிக்கரைசல் விட்டு,உப்பு போட்டு கொதிக்க விடவும்




பச்சை வாசனை போனதும் கிழங்கை சேர்த்து கொதிக்கவிடவும்.எல்லாம்
கலந்து வந்தவுடன் அடுப்பை அணைக்கவும் .







நான் சாதத்துடன் மசியல்,நல்லெண்ணெய் விட்டு சாப்பிட்டேன்,அருமையாக இருந்தது ... இப்போ நினைத்தாலும் சுவை நாவில் தோன்றுகிறது ...


வாழ்க வளமுடன் 







4 comments:

  1. கருணைக்கிழங்கு மசியல் செய்முறையும்,விளக்கப்படங்களும் மிக அருமை.

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கு,கருத்துக்கு நன்றி...

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  3. நாவூருதே...சரிதா...

    ReplyDelete
  4. ஹி ஹி ஹி /// நன்றி ஆன்ட்டி

    வாழ்க வளமுடன்

    ReplyDelete