Friday 7 November 2014

சால்னா(வெஜ்)



ஹோட்டல்'ல பரோட்டாவுக்கு,இப்போ வெஜ் குருமா,ரெய்த்தா அல்லது ஸ்பெஷல் கிரேவீஸ்(மஸ்ரூம்,பனீர் பேபிகார்ன்) சாப்பிடுகிறோம்.

முன்பு  சாப்பிட்ட சால்னா இப்போ கிடைக்கிறதில்லை.அதன் சுவை சாப்பிட்டவர்களுக்கு தெரியும்.

பரோட்டா செய்தேன், சால்னா(வெஜ்)ஞாபகம், அதனால் செய்து பார்த்தேன்.வீட்டில் ஒரே பாராட்டு மழை !!!!!

நீங்களும் சாப்பிடுங்கள் இதோ ரெசிபி தருகிறேன்....


தேவையான பொருட்கள் :







வதக்கி அரைக்க,


பெ.வெங்காயம் -1 1/2

தக்காளி -2
பூண்டு -6 பல்லு 
இஞ்சி -2 இன்ச் 
தேங்காய் -நறுக்கியது 4 மே.கரண்டி 
சோம்பு -2 தே .கரண்டி  
சீரகம் -2 தே.கரண்டி 
மிளகு -2 மே .கரண்டி 
பட்டை ,கிராம்பு,பிரியாணி இலை -வாசனைக்கு 
எண்ணெய் -வதக்க தே .அளவு 
உப்பு-1/2 தே.கரண்டி(அரைக்கும் போது போட )

தாளிக்க :





பெ.வெங்காயம் -1 1/2

தக்காளி -1
கருவேப்பிலை -1/2 கைப்பிடி 

செய்முறை :


கடாயில் எண்ணெய் ஊற்றி,வதக்கி அரைக்க என மேலே கொடுத்துள்ள பொருட்களை வதக்கி உப்பு போட்டு அரைத்து தனியாக வைக்கவும் .






அதே கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க என கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளிக்கவும் 




பிறகு அரைத்த கலவையை சேர்த்து உப்பு கொஞ்சம் போட்டு 2 நிமிடம் கிளறவும்,தண்ணீர் விட்டு கொதித்தவுடன், மூடி மிதமான தீயில் வைத்து கொதிக்கவிடவும்.பச்சை வாசனை போனவுடன் அடுப்பை அணைக்கவும். 

கடைசியில் நெய் கொஞ்சம் விட்டு பரிமாறவும்...

பரோட்டாவிற்கு ஈஸியா செய்ற சால்னா தயார் .... 





குறிப்பு:காரத்திற்கு மிளகு மட்டும் சேர்ப்பதால்,காரத்திற்கேற்ப  தேவையான அளவு சேர்த்து கொள்ளவும்.


எங்க வீட்ல பெரும்பாலும் மண்பானை சமையல் தான்,அதான் மண்சட்டியில் செய்தேன். 






2 comments: